#BREAKING: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு..!
காஷ்மீரின் சோப்பூரில் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இன்று வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், இரண்டு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து ராணுவம், போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.