மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழ்ந்ததாக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தச் செய்தி குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்து,ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நகரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் குழப்பமான செய்தி.நகர் சிவில் மருத்துவமனை ஐசியூ தீ விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…