#BREAKING: தொழில்நுட்ப கோளாறு – விமானம் அவசர தரையிறக்கம்!
டெல்லி விமானம் (AI106) தொழில்நுட்பக் கோளாறால் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வசரமாக தரையிறக்கப்பட்டது. ஏறக்குறைய 300 பயணிகளுடன் டெல்லி வந்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா (AI106) விமானம் சுவீடனில் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நுவார்க் நகரில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.