#Breaking : புதுச்சேரியின் துணை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்…!
தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது புதுச்சேரியின்துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி அவர்கள் தெரிவித்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கிரண்பேடியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது புதுச்சேரியின்துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். புதுச்சேரியின் ஐந்தாவது பெண் ஆளுநராக டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.