#BREAKING: தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது..! கர்நாடக முதல்வருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்..!
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். மேலும்’ தமிழகம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும் என்று ஊடகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம்”.
இதனால் “கீழ்கண்ட முக்கியமான உண்மை அம்சங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நான் இந்த கடிதம் எழுதுகிறேன். ஜூன் 1ம் தேதி கர்நாடகாவின் நான்கு நீர்நிலைகளில் மொத்தம் 24.352 டிஎம்சி தண்ணீர் இருந்தது”.
அதேபோல், “மேட்டூர் அணையில் 69.77 டிஎம்சியும், பவானிசாகர் அணையில் 16.653 டிஎம்சியும், பிலிகுண்டுலு அளவீடு நிலையத்தில் இருந்து 14.054 டிஎம்சி தண்ணீரும் வெளியேறுவது 6-8-2023 அன்று ஊடகங்களில் வந்துள்ளது. தமிழகத்தின் மேட்டூர் அணையில் இந்த ஆண்டு மொத்தம் 83.831 டிஎம்சி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது” என்று பொம்மை கூறியுள்ளார்.