#BREAKING : அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி குழு சந்திப்பு..!
நீட் தேர்வு எழுத தமிழகத்திற்கு விலக்கு தரக்கோரி, டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. ஆனால் தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் சந்தித்து பேச நேரம் வழங்கவில்லை.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது நீட் தேர்வு எழுத தமிழகத்திற்கு விலக்கு தரக்கோரி, டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.
மூன்று முறை சந்திப்பு ரத்தான நிலையில், நான்காவது முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அனைத்து கட்சி குழு பேசி வருவது குறிப்பிடத்தக்கது.