கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவான ஸ்வப்னாவின் முன்ஜாமீன் மனு 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சுங்கத்துறை அதிகாரிகள் இந்தபார்சலை ஆய்வு செய்தனர்.
அப்போது, சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் வழக்கில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவான ஸ்வப்னா, கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.
இதனால், சிவசங்கர் முதல்வரின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்கக்கடத்தலுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்திற்கு பார்சல் வந்தது தெரியாது என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஸ்வப்னாவின் முன்ஜாமீன் மனு வரும் 14-ஆம் தேதிக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…