#BREAKING: சசிகலா உடல்நிலைக் குறைவு குறித்து சந்தேகம் – ஆணையத்தில் புகார்.!
சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று காய்ச்ச்ல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில், சசிகலாவை காண அவரது உறவினர்கள் கூடியுள்ளனர்.
சசிகலாவின் உடல்நிலை குறைத்த தற்போதைய நிலையை தெளிவுபடுத்துமாறு உறவினர்கள் வலியறுத்தியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகாரளித்துள்ளார்.
மேலும், சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். சசிகலாவிற்கு சிறையில் ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். இதனிடையே, வரும் 27-ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.