#BREAKING: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம்..?

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள சூலூர்பேட்டையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வந்த 2 பணியாளர்களுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்கள் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில், ஒரு பணியாளரின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் எனவும் நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025