தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை இந்த ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த 2018 மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.
பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னையில் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக வேந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கிடையில், ஆலை நிர்வாகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாதம் திறக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பராமரிப்பு மற்றும் பொருள்களை அனைத்து வீணாகிப் போய்விடும் என்பதால் இடைக்கலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தனர். ஆலய பராமரிக்கக் கூடிய அனைத்து விஷயங்களும் அரசு செய்து வருகிறது. இதற்கிடையில் ஆலையை இயங்கத் தொடங்கினால் பெரும் பிரச்சனையை உருவாக்கி விடும் என தெரிவிக்கப்பட்டது இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்.
தமிழக அரசின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையின் 36% ஸ்டெர்லைட் ஆலை கொடுத்து வந்தது. இன்று நடந்த விவாதத்தின்போது ஆலை மூடப்பட்டு உள்ளதால் இந்தியா வெளிநாடுகளிலிருந்து காப்பரை இறக்குமதி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளது என ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.
#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..!
மேலும், அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஆலை செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்திருக்கக் கூடிய பகுதியின் உள்ள காற்றின் அளவு தேசிய காற்று தர நிர்ணய அமைப்பின் தரக்குறியீடுடன் சமமாக உள்ளது. அதாவது ஆலையால் எந்தவித காற்று மாசுபாடு ஏற்படவில்லை வேதாந்தா நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…