+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில பாடத்திட்ட சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், 12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஜூலை இறுதிக்குள் ஆந்திராவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு…
டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது. திருவண்ணாமலை ; புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை…
சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பியோண்ட் தி ஃபேரி டேல்' என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல்…
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி…