#BREAKING: பூரி ஜெகநாதர் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி.!
ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறும். நாளை நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சமீபத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரதங்களை இழுக்க இயந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 19-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் நலனையும், பாதுகாப்பையும் கருதி இந்தாண்டு பூரி தேரோட்ட நிகழ்வை அனுமதிக்க முடியாது என கூறியது.
இந்நிலையில், பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சமீபத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேரோட்டத்துக்கு அனுமதி அளித்தால், ஜெகநாதர் தங்களை மன்னித்து அருள மாட்டார் என கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.