#BREAKING: மாணவர் உயிரிழப்பு- மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து 4-வது முறையாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 3 முறை உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், மீண்டும் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
உக்ரைனில் குண்டு வீச்சில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி 4-வது முறையாக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.