#BREAKING: மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி. ரெய்டு – ராகுல் காந்தி கண்டனம்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வியை எதிர்கொள்ளும் போது பாஜக கடைபிடிக்கும் வழிமுறைதான் வருமானவரித்துறை சோதனை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Raiding the opposition is BJP’s coping mechanism when facing electoral defeat.
— Rahul Gandhi (@RahulGandhi) April 2, 2021