#BREAKING: சோனியா காந்தி – பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனை!
சோனியா காந்தியிடம், பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் 4-ஆவது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதில் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிலும், ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி மேலும் கேள்வியை எழுப்பியது.
2024 பொதுத் தேர்தலை முன்னிட்டு, சில நாட்களாகவே அதாவது இதுவரை 3 முறை பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், தேர்தலுக்கான ஆய்வறிக்கை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று 4ஆவது முறையாக பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியை சந்தித்து பேசி வருகிறார்.