#Breaking:சற்று குறைவு!ஆனால் கவனம்…கடந்த ஒரே நாளில் 2.38 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 310 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,76,18,271 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,891 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 19,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,76,18,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 310 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,86,761 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,57,421 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,53,94,882 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,36,628 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,58,04,41,770 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 79,91,230 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 8,209 ஆக இருந்த நிலையில்,தற்போது 8,891 ஆக உயர்ந்துள்ளது.