புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் வைஷ்ணவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,காயமடைந்தவர்கள் 13 பேர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.எனினும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த நெரிசலில் சிக்கி டெல்லி,ஹரியானா, ஜம்மு – காஷ்மீர்,பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிகாலை 2:45 மணியளவில் நடந்தது என்றும்,ஆரம்ப அறிக்கைகளின்படி,கோயிலின் வரிசையில் நின்ற பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு,இதன் விளைவாக மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டனர் என்றும்,அதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்தனர்,13 பேர் காயமடைந்தனர் என்றும் ஜம்மு – காஷ்மீர் டிஜிபி தில்பாக் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாதா வைஷ்ணோ தேவி பவனில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அனுதாபங்கள்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மேலும்,இறந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் , காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…
சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…
குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…
விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…