#Breaking:அதிர்ச்சி…கடந்த ஒரே நாளில் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா;5 லட்சத்தை நெருங்கிய சிகிச்சை!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,53,68,372 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3071 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 23,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,53,68,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,83,463 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,895 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,12,740 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,72,169 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,50,61,92,903 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 90,59,360 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3071 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1203 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 876,டெல்லியில் – 513,கேரளாவில் – 284,தமிழகத்தில் – 121 ஆக பதிவாகியுள்ளது.