#Breaking:அதிர்ச்சி…மீண்டும் 1 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 32,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,51,09,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,876 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,48,67,80,227 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 91,25,099 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது.அதில் 995 பேர் குணமடைந்துள்ளனர்.1635 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 797,டெல்லியில் – 465,கேரளாவில் – 234,தமிழகத்தில் – 121 ஆக பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025