#BREAKING: பாலியல் வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம்.
ஆசிரம பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும், சாமியாரின் மனைவி, மகன் உட்பட 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விடுவித்திருந்தது.
இவ்வழக்கில் சாமியாரின் மனைவி, மகன் உட்பட 5 பேர் குற்றச்சாட்டப்பட்டிருந்தனர். இந்த சமயத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற வழக்கில் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சாமியார் ஆசாராம் பாபு. தற்போது குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.