#BREAKING: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு.!

Default Image

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடக்கம்.

அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் போட்டி இருந்தால் அக்.17-ஆம் தேதி தேர்தல், அக்.19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CONGRESS

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்