#BREAKING: தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு.!
15 – வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு 6-வது தவணையாக ரூ.335.41 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி ஒதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடிநிதி ஒதுக்கி உள்ளது.