#Breaking:மீண்டும் அதிகரிப்பு…ஒரே நாளில் 7,554 பேருக்கு கொரோனா;223 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,554 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 223 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,38,599 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 6,915 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 7,554 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 600 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,38,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 180 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 223 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,14,246 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 14,123 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,38,673 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 92,472 ஆக இருந்த நிலையில்,தற்போது ஆக 85,680 குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,77,79,92,977 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 8,55,862 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025