விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பெயரில் இவ்விருது இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேஜர் தயான் சந்த் இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்றும் நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு மரியாதை அவரது பெயரால் சூட்டப்படுவது பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி இருப்பதாலும், ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு அரையிறுதி வரை சென்று வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…