#Breaking : சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் …!
பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பை ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.