குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்னுடைய கருத்தால் குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க தயார். குடியரசுத் தலைவரை அவமதிப்பது குறித்து என்னால் கற்பனையும் செய்ய முடியாது. குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, தவறுதலாக பேசிவிட்டேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம், தண்டனையை ஏற்க தயார் என தெரிவித்தார். ஆனாள், நான் பேசியதற்காக சோனியா காந்தியை ஏன் இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சவுத்ரியும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…