#BREAKING : டெல்லியில் ராகுல் காந்தி கைது..!
குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முற்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கைது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார்.
அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல இடஙக்ளில் தங்கள் எதிர்ப்பை காட்ட போராட்டம் நடத்தினர்.
அன்று, சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இன்று அமலாக்க துரையின் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.
சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி நிலையில், பேரணியாக சென்ற அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தியிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் குசியாராசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்வோம் என உறுதியாக இருந்ததையடுத்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.