#BREAKING: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி! – விசாரணை தொடக்கம்!
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி. விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக ராகுல் காந்தி பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தபோது, வழியெங்கும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தற்போது ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து, பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.