காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார் எனவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். நான் கட்சித் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் மற்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாடாளுமன்ற தோல்வியால் தனது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்தெடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் குரல் எழுப்பி வந்த நிலையில், அக்.17-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் குழு அறிவித்திருந்தது.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒருவருக்கு மேல் போட்டி இருந்தால் அக்.17-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அக்.19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலை இருக்கும்போது தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அசோக் கெலாட் தனது பதிவியை ராஜினாமா செய்தால், அந்த பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…