உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்த நிலையிலும், மீண்டும் முதல்வராக தேர்வு.
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை பிடித்து பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத்தக்க வைத்தது. ஆனால், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் தோல்வி அடைந்ததால் புதிய முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் சில நாட்களில் அவர் போட்டியிடுவதற்கான சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாஜக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் போட்டியிடுவதற்கான வழிவகை செய்யப்படும் என பாஜக தரப்பில் தெரிவித்துள்ளனர். புஷ்கர் சிங் தாமியின் திறமையான நிர்வாகம் காரணமாக மீண்டும் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…