#BREAKING : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா…!

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.
பாஜக வெற்றி
இந்த 5 மாநில தேர்தலில், உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில் காங்கிரஸின் தலைவராக காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
5 மாநில தலைவர்கள் ராஜினாமா
தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவின்படி, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்குப் பொறுப்பேற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025