BREAKING: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது பஞ்சாப் அரசு.!
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தியுள்ளது பஞ்சாப் அரசு.
தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் வாட் வரி உயர்வால் பஞ்சாப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65க்கும், டீசல் ரூ.105.24க்கும் விற்பனையாகிறது. 2 நாட்களுக்கு முன் பெட்ரோல் விலை குறையும் என்று செய்தி வெளியான நிலையில், பஞ்சாப்பில் தலைகீழாக உயர்ந்துள்ளது அம்மாநில மக்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி.
முதல்வர் பகவந்த் மானின் அரசாங்கம் எரிபொருள் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. ஆம்… ஏற்கனவே கடந்த பிப்ரவரியில், பஞ்சாப் மாநில அமைச்சரவை ஆண்டுக்கு ரூ.300 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது, 90 பைசா VAT வரிக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.