புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிப்பானையை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரை மற்றும் ஒதுக்கீடு செய்யும்போது தவறுகள் நடத்திருப்பதாகவும், பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையான வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்று சுயேட்சை எம்எல்ஏ பிரெகேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வருவதால், அதை மறுவரையரை செய்வதற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தது. எனவே, புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமில்லை என்று கூறியது.
வரும் 21ம் தேதி நடத்தவுள்ள உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்றும் விசாரணையை அக்.7க்கு ஒத்திவைக்க புதுச்சேரி அரசு தரப்பு கோரிய நிலையில், வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப்பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் வார்டு குளறுபடிகளை சரி செய்து புதிய அறிவிப்பாணையை 5 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …