மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆக.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர்,முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் அடுத்து,ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில்காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.கடந்த ஜூலை மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…