நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். தற்போது 3- ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார்.இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி , நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.இந்நிலையில் இன்றும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அப்பொழுது அவர் பேசுகையில்,பிரதமர் கூறிய ”சுயசார்பு இந்தியா” சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது.
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்கவே பிரதமர் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவைகளை குறிப்பிடலாம்.முக்கியமான 8 துறைகளுக்கு இன்று அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே உற்பத்தி இலக்கை எட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். .முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுத்துச் செல்லும் போக்குவரத்தை மேம்படுத்த 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் .அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் .
சுரங்கத் துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் . நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெறுவதே நமது இலக்கு என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…