உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்சிகியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நிலவி வரும் சூழல் தொடர்பாக அதிபர் செலன்ஸ்கியுடன் சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவியதற்காக செலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற தொடர்ந்து உதவ பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…