#BREAKING: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு.!
நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் அவசர ஆலோசனை கூட்டம் சற்றுமுன் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 மாநிலங்களுக்கு தினமும் 6,785 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பிறகு இந்த உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.