#breaking: புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சியை இழந்தது. பின்னர் முதல்வர் நாராயணசாமி பதிவு ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் அளித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் தமிழிசையின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து முடிவு அறிவிக்கும் என கூறப்படுகிறது.