#BREAKING : பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்
பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து, விடுவிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனு என்பது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
மத்திய அரசு தரப்பில் இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்குமாறு தெரிவித்தனர். உடனடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கடந்த முறையே ஆளுநர் முடிவெடுப்பதாக கூறப்பட்டது, அது என்ன ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.
ஆளுநருக்கு சட்டவிலக்களிப்பு என்ற அதிகாரம் இருப்பதால், இந்த விவகாரத்தை நீண்ட நாள் நிலுவையில் வைத்திருக்க முடியாது. ஆளுநர் எப்போது முடிவெடுப்பார் என கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆளுநர் என்பவர் தமிழக அரசின் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்று தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.