தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு.
தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட 4 முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகவும், 2024-ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்குழு ஒன்றை, நேற்று உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக அவரை கட்சியில் கிற அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக சேர மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகிராஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பிரசாந்த் கிஷோர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் இணையாவிட்டாலும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…