#BREAKING: உள்நாட்டில் தயாரான போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டில் தயாரான விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. கேரள மாநிலம் கொச்சி கட்டுமான தளத்தில் விமானந்தாங்கி போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள கப்பலில் 34 போர் விமானிகள், ஹெலிகாப்டர்கள் இருக்கும்.
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பலை விட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் சுமார் 7 மடங்கு பெரியதாகும். இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 50 மீட்டர் உயரமும் கொண்டது. சுமார் 43,000 டன் எடையுடன் 14 அடுக்குகள் கொண்ட போர்க்கப்பல் 2,300 அறைகள் உள்ளன. அதிகபட்ச வேகமாக 28 நாட்ஸ் திறன் கொண்ட போர்க்கப்பலில் கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் இருப்பார்கள்.
மேலும், இதில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைகள், சிடி ஸ்கேன் என சிறிய மருத்துவமனையே போர்க்கப்பலில் இடம்பெற்றுள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல். இந்திய கடற்படையின் 4வது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். இந்த போர்க்கப்பல் மூலம் இந்திய கடற்படைக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு ஆகும். மேலும், இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.