#Breaking:இன்று மீண்டும் உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த சூழலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க வேண்டும் என டெல்லியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதனையடுத்து,ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 249 இந்தியர்கள் 5 வது விமானத்தில் டெல்லி வந்தடைந்துள்ளனர்.உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் ருமேனியா வந்த நிலையில்,விமானம் மூலமாக அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பான பணிகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
அந்த வகையில்,மத்திய அமைச்சர்கள் கிரண் சிஜிஜூ,ஜோதிராத்திய சிந்தியா,ஹர்தீப் சிங்,விகே சிங் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025