#BREAKING: 4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு.!
3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது 4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் மத்திய அரசு அறிவிப்பு.! pic.twitter.com/WMY7Tq0hTQ
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 29, 2020