#Breaking: கேரளாவில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி- முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.
கேரளாவில் மேலும் 29 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் எனவும், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. உபயோகிக்காமல் திறக்க உத்தரவிட்ட நிலையில், அங்கு முடி வெட்டுதல் மற்றும் சேவிங்குக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.