#BREAKING : புதிய நாடாளுமன்ற கட்ட அனுமதி வழங்கப்பட்டது..!
புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் கட்டடப் பணிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி வழங்கியது தொடர்ந்து , டிசம்பா் 10-ஆம் தேதி பிரதமா் அடிக்கல் நாட்டினாா். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதியும் இருக்கும். எதிர்காலத்தில் இரு வீடுகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.