#Breaking:மக்களே உஷார்!மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா;ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?..!
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,962 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4,270 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,76,817 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 26 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,692 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,619 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,28,073 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,94,09,46,157 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 11,92,427 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.