#Breaking:மக்களே கவலை வேண்டாம்…10 ஆயிரத்துக்கு கீழ் சரிந்த கொரோனா மற்றும் சற்று குறைந்த உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,013 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 119 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,24,130 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 10,273 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 8,013 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 2,200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,24,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 243 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 119 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,13,843 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 16,765 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,07,686 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1,11,472 ஆக இருந்த நிலையில்,தற்போது ஆக 1,02,601 குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,77,50,86,335 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,90,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.