#Breaking:மக்களே ஜாக்கிரதை…ஒரே நாளில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா;40,000-ஐ தாண்டிய சிகிச்சை!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,584 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் ஆக 8,329 அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,13,435 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆக பதிவாகியுள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,757 ஆக பதிவாகியுள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 4,216 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,48,308 ஆக பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 40,370 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 1,94,92,71,111 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 15,08,406 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.