#BREAKING : பெகாஸஸ் விவகாரம் – அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் மீதான விசாரணை…!

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் மனுக்களை அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெகாசஸ் விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், பெகாஸஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் மனுக்களை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.