#BREAKING: 10வது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கம்!!
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற மலைகளை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசாஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவை என இரு அவை தலைவர்களும் எச்சரித்தும், விவாதிக்க வேண்டும் என எதிரிக்கட்சிகள் முழக்கமிட்டு, அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதனால் கூட்டத்தொடர் சரியாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை 10வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் மென்பொருல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.